ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – பிரசன்ன உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தின் முன் சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேரை மீண்டும் நவம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களை இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மாணவன் ஒருவருக்குப் பிணை வழங்கப்பட்டதோடு ஏனைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களில் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிக்கார மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply