ஐஸ் பாக்ஸில் மனித தலைகள், வீட்டுக்குள் சடலங்கள்: ஜப்பானில் ஒரு திகில் சம்பவம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் 2 மனித தலைகள் இருந்துள்ளன.இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போது நெஞ்சை உறைய வைக்கும் விதமாக அங்கு 7 சடலங்கள் இருந்துள்ளன. சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி (27) என்பவரை கைது செய்தனர்.

எனினும், வீட்டில் இருந்த சடலங்கள் தொடர்பான தெளிவான காரணங்களை போலீசார் கூறவில்லை. மேலும், இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான 23 வயது பெண் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply