உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு : அமைச்சர் பைஸர் முஸ்தபா
புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று மு.ப. 11 மணியிளவில் சைச்சாத்திடவுள்ளார்.
அவ்வர்த்தமானி அறிவித்தலில், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவுள்ளன. அத்துடன் இழபறி நிலையிலிருந்த அம்பகமுவ மற்றும் நுவரெலியா உள்ளூராட்சி மன்றங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே குறித்த உள்ளூராட்சி மன்றங்களை தலா மூன்று உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரித்துள்ளதுடன் அதுவும் இன்றைய வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதிவிக்காலம் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எல்லை நிர்ணயப் பணி உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. அது தொடர்பில் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 24 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு கட்சித் தலைவர்கள் வேண்டிக்கொண்டனர். அதற்கிணங்க எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
எனவே அதனைத்தொடர்ந்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான, உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை குறித்த வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படும் எனத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply