நிதியயை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம். மீளாய்வுக் கூட்டத்தில் முடிவு
சர்வதேச நாணய நிதியம் 251.4மில்லியனை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. நிதி வழங்குவது தொடர்பான மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தில் பணிப்பாளர் சபை இந்த மீளாய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. பல்வேறு பல்வேறுபட்ட நிபந்தனைகளுடன் தொடர்ந்தும் நிதியை வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.
நிதி வழங்குவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பகுதி பகுதியாக நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் ஒன்றை அரசாங்கத்துடன் செய்திருந்தது.
அதன் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டு இடம்பெறும் மீளாய்வுக் கூட்டத்தில் ஒப்ப்ந்தத்தில் கூறப்பட்டதன்படி நிதியை வழங்க முடியுமா என்பது தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது வந்தது.
அடுத்த நிதியாண்டுக்கான நிதியை வழங்குவது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது என்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் 251.4 மில்லிய்ன்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply