அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்! நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலி

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.மேற்கு அவுஸ்திரேலியாவின் Margaret ஆற்று பகுதியிலுள்ள Osmington என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 சிறுவர்கள் மற்றும் 3 இளம் வயதுடையோர் இந்த சம்பவத்தினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. தாக்குல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்  எந்தவொரு இழப்பும் துயரமானது, ஆனால் நான்கு குழந்தைகள் மற்றும் மூன்று இளம் வயதினரின் இழப்பு கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கி சூட்டு சம்பவம் இதுவென்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply