யாழ் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு மத்திய நிலையம்

யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் 3 மாடிக்கட்டடத்தில் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை வழங்குவதல் தொடர்பில் 3 வருட பயிற்சியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள இயற்கை சுகாதார சேவை மத்திய நிலையமாவதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வைத்தியபீடத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சிகளும் இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

2017 இந்த வைத்தியசாலையில் 39ஆயித்து 390 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 12486 சத்திர சிகிச்சைக்கு பின்னரான புனரமைப்பு பாதுகாப்புக்கு தேவையான மாற்று சத்திரசிகிச்சைகளாகும். புனரமைப்பு பாதுகாப்பு சேவைக்காக இந்த வைத்தியசாலையில் பௌதீக வசதி மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சிகளை மேம்படுத்தவேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்காமைவாக யாழ்போதனாவைத்தியசாலையில் 3 மாடி கட்டடத்தில் புனரமைப்பு மத்திய நிலையத்தை அமைப்பதற்கும் இதற்கான உபகரணங்களை விநியோகிப்பதற்கும் சம்பந்தப்பட்ட பணியாளர் சபையின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக 3வருட பயிற்சி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான உத்தேசத்திட்டத்தை 605 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply