இங்கிலாந்து லாட்டரியில் இளம் ஜோடிக்கு ரூ.10 கோடி பரிசு
இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன் அருகேயுள்ள ஸ்னாட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி மிக் டைலர் (35), சாரா ஹார்மர் (33). காதலர்களான இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி மிக் டைலர் ஆன்லைன் மூலம் லாட்டரி வாங்கினார். அந்த லாட்டரி குலுக்கல் சமீபத்தில் நடந்தது. அதில் அவருக்கு ரூ.10 கோடி (1 மில்லியன் பவுண்ட்) பரிசு கிடைத்தது.
நேஷனல் லாட்டரியில் இருந்து அந்த தகவல் மெயிலில் வந்தது. அதை பார்த்த அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த பரிசு தொகையை கொண்டு ஆசையாக தாங்கள் விரும்பிய வீட்டை வாங்க இருப்பதாகவும், திருமணத்துக்கு பயன்படுத்த இருப்பதாகவும் அந்த இளம் ஜோடி தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply