ஜேர்மனியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி

ஜேர்மனி தலைநகர் பேர்லினில் ஒன்றுதிரண்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.இனவெறி தாக்குதல், பாரபட்சம் மற்றும் நாட்டின் தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று நடத்தப்பட்டுள்ளது.

‘பாலங்களை ஏற்படுத்துங்கள் – தடுப்புச்சுவர்கள் வேண்டாம், ‘இனவெறிக்கு எதிராக ஒன்றிணையுங்கள்’, ‘சமூகத்தில் சுயாதீனமாக செயற்பட முடியாதுள்ளோம்’ போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பொப்பிசைப் பாடல்களுக்கு நடனமாடிக்கொண்டும் சென்றனர்.

நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து சுமார் 242,000 மக்கள் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய ஆண்டுகளாக ஜேர்மனியில் நடத்தப்பட்ட பேரணிகளில் இது மிகப்பெரிய பேரணியாக அமைந்துள்ளது.

ஜேர்மனியில் பவாரியன் மாநிலத்திற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவு வலுப்பெற்றுள்ள நிலையில், இந்த பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி கட்சியானது குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக செயற்படுவதோடு, கடந்த வருட நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றிற்குள் நுழைந்தது. சக்திமிக்க எதிர்க்கட்சியாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply