ஜனாதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது: சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மீறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக அனைவரும் உணர்ந்திருப்பார்களென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானதென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் பயணத்தில் பெரும் தோல்வியை தழுவியுள்ளார். மேலும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தவறானதென்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது.

இதனால் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அவரின் ஆசைக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியையும் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பு மக்கள் நீதிமன்றத்திலும் தோல்வியையே தழுவும்.

ஆகையால் மஹிந்த தானாகவே பதவியை இராஜினாமா? செய்வது சிறந்தது” என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply