மஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது : டிலான் பெரேரா

மஹிந்த ராஜபக்ஷ தானாக பிரதமர் பதவியில் இருந்து விலகினாலே தவிர அவரை பதிவில் இருந்து நீக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.நீதிமன்ற தீர்ப்பினாலேயோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தாலும் கூட மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தல் மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 24 மணித்தியால காலக்கெடு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், நாளை மஹிந்தவின் மேன்முறையீடு மனு, விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதன் பின்னரே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply