ராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து

வரலாற்றில் முதற்தடவையாக முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக அரச வைத்திய சங்கத்தின் 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
புதிய அமைச்சரவையில் ராஜிதவிற்கு மீண்டும் சுகாதார அமைச்சு வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜிதவின் பதவிக்காலத்தில் வைத்தியர்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல் இடம்பெற்றதாகவும் அரச வைத்திய சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், புதிய அமைச்சரவையில் ராஜித சேனாரத்னவிற்கு சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply