மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையிலான கூட்டமொன்று தற்பொழுது கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களும் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமா உரை இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply