பலுசிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்- 6 பாக். வீரர்கள் பலி

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டர்பத் மாவட்டம் கச் பகுதியில் ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் ராணுவ வாகனம் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோல் அதேபகுதியில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply