அமைச்சராக தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படின் தியாகம் செய்ய தயார் : காவிந்த ஜயவர்தன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சரவை நாளை (17) அமைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள தனி அரசாங்கத்திற்கு அரசியலமைப்பின்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 30 பேரும், பிரதி அமைச்சர்கள் 40 பேரும் மட்டுமே நியமிக்க முடியும்.

நாட்டுக்கு சேவையாற்றும் தகுதியுள்ள முக்கிய நபர்களைத் தெரிவு செய்து கபினட் அமைச்சர்களை நியமிக்குமாறு தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய அமைச்சரவையில் தகுதியானவர்கள் அமைவதற்காக தாம் அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேலும் குறிப்பிட்டார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply