கிண்ணியா சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு கிழக்கு ஆளுநர் விஜயம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிண்ணியாவில் மண் அகழ்வின் போது உயிரிழந்த இருவரது வீடுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்தார்.இதன்போது உயிரிழந்த இருவரினதும் குடும்பத்திற்கு மாகாண நிதியில் இருந்து தலா ஐம்பது ஆயிரம் ரூபா காசோலையை ஆளுநர் வழங்கிவைத்தார் .
இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் மண் அகழ்வது , மரங்கள் வெட்டுதல் போன்றவை தங்களது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதறகு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர் . இதற்கு பதிலளித்த கிழக்கு ஆளுநர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் .
குறித்த விஜயத்தின் போது கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply