ரஷியாவுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலக முடிவு

அமெரிக்கா – ரஷியா (முன்னாள் சோவியத் யூனியன்) ஆகிய இருநாடுகளும் தாங்கள் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் கடந்த 1987-ம் ஆண்டில் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்காமல் ரஷியா ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவிடம் உள்ள அத்துமீறலான ஏவுகணைகளை எல்லாம் அழிக்காவிட்டால் அந்நாட்டுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

நாளைமுதல் (சனிக்கிழமை) இந்த உடன்படிக்கைக்கான நிர்பந்தங்கள் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம். தங்களிடன் உள்ள அத்துமீறலான ஏவுகணைகள், ஏவுத்தளங்கள் மற்றும் ஏவுகணை தொடர்பான இதர தளவாடங்களை ரஷியா அழிக்காவிட்டால் அந்நாட்டுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்கா வெளியேறி விடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Both comments and pings are currently closed.

Comments are closed.