நாம் ஒன்றிணைந்து பலமாக நிற்போம் :எம்.ஏ.சுமந்திரன்

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமுகமாக நாம் அனைவரும் பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இவ்வாறு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

இச்சம்பவங்களுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிமேதகு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுகின்றேன்.

இக் கோழைத்தனமான, துக்ககரமான தாக்குதல்களில் தம் அன்புக்குரியவர்களைஇழந்தவர்களுடன் இணைந்து நிற்குமாறு இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன்.

இத்தகைய கடும்போக்காளர்கள் இந்நாட்டினைபின்னிட்டு கொண்டு செல்லக்கூடாத படி, நாம் ஒன்றிணைந்து பலமாக நிற்போம். ? என்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply