ரிஷாட், அசாத்சாலி ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காக பிவிதுரு ஹெலஉறுமய கட்சி உள்ளிட்ட மேலும் இரண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, சிங்ஹலே அமைப்பின் பணிப்பாளர் டான் பிரியசாத் மற்றும் சுரகிமு ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் பாஹியன்கல ஆனந்த தேரர் ஆகியோரே இவ்வாறு முறைப்பாடுகளை பதிவிட வருகை தந்துள்ளனர்.

குறித்த மூவரும் வெவ்வேறு நேரங்களில் தங்களது முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply