இன்று பிரதமர் சிங்கப்பூர் விஜயம்

மூன்று நாள் விஜமயொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 308 விமானத்தின் மூலம் இன்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தில் பிரதமருடன் மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply