நவம்பர் 7-ந் தேதி கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பாளை கே.டி.சி.நகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநிலதுணைத்தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

2021-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் வரும் என்று அமைதியாக இருக்ககூடாது. இடையிலேயே சட்டசபை தேர்தல் வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும் நாம் அதை சந்தித்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

வருகிற நவம்பர் 7-ந் தேதி கட்சி தலைவர் கமல்ஹாசன் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். எனவே நாம் அனைவரும் இப்போது இருந்தே தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply