மஹிந்த தரப்பு தேர்தலில் புதிய கூட்டணியாக களத்தில் : ஜோன்ஸ்டன் கருத்து

கடந்த 2015 தேர்தலின் பின்னர் கூட்டு எதிரணியாக செயற்பட்ட சகல கட்சிகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டமைப்பு என புதிய கூட்டமைப்பை உருவாக்க கட்சி பிரதிநிதிகள் சகலரும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய கூட்டணியின் நிறைவேற்று குழுவில் 55 வீதமானோர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் மீதமுள்ள 45 வீதத்தை சகோதர கட்சிகளுக்கும் வழங்க நேற்றைய கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply