முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் மோதல்

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. 
 
இன்று காலை 6 மணியளவில் நாயாறு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதலில் விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன், 6 கடற்புலிகள் கொல்லப்பட்டதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு ஆதரவாக விமானப்படையினரின் எம்.ஐ.௨4 உலங்குவானூர்திகள் கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நான்கு படகுகள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், இந்த மோதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply