மஹிந்த ராஜபக்ஸ விசேட அறிக்கை

புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் 19 ஆவது அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்து நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட வரையறைகளின்படி செயற்பட்டுச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (17) அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் கூறியுள்ளார்.

அதேபோன்று, நாட்டின் நிருவாக முறைமை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் என்பவற்றையும் முழுமையாக சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான சகல தகவல்களையும் எதிர்வரும் நாட்களில் மக்களிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply