பதவிகளை இராஜினாமா செய்கின்ற ரணில்? மற்றும் பல அமைச்சர்கள் : கூடுகின்றது முக்கிய கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதன்படி தொழில்நுட்பத்திறன், விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரீன் பெர்ணான்டோ, தேசிய பொருளாதார கொள்கை வருப்பு இராஜாங்க அமைச்சர் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் இதற்கான அறிவிப்பை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் இராஜினாமா?

பதவியை இராஜினாமா செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின் அவர் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply