தமிழ் மக்களின் முடிவு இன ரீதியானது அல்ல என்பதை புதிய ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும் : செல்வம் எம்.பி.

தமிழ் மக்களின் முடிவு இன ரீதியானது அல்ல என்பதனை புரிந்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட வேண்டும் என டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
பெரும்பாண்மை தமிழ் மக்களினால் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டிருந்தாலும் மற்றுமொரு பெரும்பாண்மை இனத்தை சந்தவருக்கே வாக்களித்துள்ளார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை ஒற்றுமையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply