7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.இந்த பதவிப்பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவன்வெலி சாய மண்டபத்தில் இடம்பெற்றது.

பதவியேற்ற பின்னர், உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பை பேணுவதே தனது முதன்மையான நோக்கம் என தெரிவித்தார்.

அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, இலங்கையில் அல்லது அதற்கு வெளியே மற்றொரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதிக்கவோ, ஆதரவு வழங்கவோ மாட்டேன் என அவர் இதன்போது சத்தியப்பிரமாணம் செய்தார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க அநுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி சாயவுக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முதலில் மத அனுஷ்டானத்தில் ஈடுபட்டார்.

இவ்விழாவிற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமானஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply