உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து விலையினை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து விலையினை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரம் தொடக்கம் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வௌிநாட்டில் இருந்து இந்நாட்டுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் சீமெந்தின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 கிலோ சீமெந்தின் பொதி ஒன்றின் நிலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

அண்மையில் வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு சீமெந்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply