அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவிலிருந்து அதிரடியாகக் கொண்டு வரப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தற்போது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் ‘நார்கோ-டெரரிசம்’ (Narco-terrorism) உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் வெனிசுலா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக்கோலஸ் மதுரோ குவேரா (நிகோலசிட்டோ), அமெரிக்கச் சட்ட அமைப்பின் மீது தங்களுக்குத் தார்மீக ரீதியான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தனது தந்தை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்றும், அவரைச் சட்டவிரோதமாக அமெரிக்கா ‘கடத்தி’ வந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>












