ட்ரம்பை விளாசிய ஜெர்மனி அதிபர் : சர்வதேச அளவில் வெடிக்கும் புதிய சர்ச்சை

Wednesday, March 25th, 2026 at 7:04 (SLT)

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது என்றும், இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு “பேரழிவுகரமான அரசியல் தவறு” என்றும் ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) சாடியுள்ளார். பெர்லினில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க-ஜெர்மனி உறவுகளில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவித்தார். குறிப்பாக, ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படும் காரணங்கள் எதுவும் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொலம்பியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 66-ஆக உயர்வு 

Tuesday, March 24th, 2026 at 10:25 (SLT)

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புட்டுமாயோ (Putumayo) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லெகிசாமோ (Puerto Leguizamo) விமான நிலையத்திலிருந்து 125 பேருடன் புறப்பட்ட இராணுவத்திற்குச் சொந்தமான சி-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) விமானம், ஓடுபாதையிலிருந்து எழும்பிய சில நிமிடங்களிலேயே தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 66 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் 11 விமானப்படை வீரர்கள் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் அடங்குவர். எஞ்சிய 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

களுபோவில பகுதியில் சீனப் பெண் கொலை

Tuesday, March 24th, 2026 at 10:21 (SLT)

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில், சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

Tuesday, March 24th, 2026 at 10:19 (SLT)

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வல்பொல லலா ஆயுதங்களுடன் கைது

Tuesday, March 24th, 2026 at 10:16 (SLT)

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் குழுவினர் வல்பொல சந்தியில் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, 10 கிராமிற்கும் அதிகப்படியான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Tuesday, March 24th, 2026 at 9:17 (SLT)

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

Tuesday, March 24th, 2026 at 9:14 (SLT)

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடற்பரப்பில் எரிவாயு, எண்ணெய் வளங்கள் கண்டறிதல் சாத்தியம்

Monday, March 23rd, 2026 at 8:28 (SLT)

இலங்கையின் கடல்சார் பகுதிகளில் சுமார் 3 டிரில்லியன் கனஅடி (trillion cubic feet) அளவிற்கு இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வளைகுடா நாடுகளை மிரட்டும் ஈரான் ட்ரம்பின் 48 மணிநேரக் கெடுவால் உச்சக்கட்டப் பதற்றம்

Monday, March 23rd, 2026 at 8:25 (SLT)

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்கத் தவறினால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை இரவு (மார்ச் 21, 2026) 48 மணிநேரக் கெடு விதித்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ஈரானின் மின் கட்டமைப்பு தாக்கப்பட்டால், பதிலுக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகளின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Desalination Plants), எரிசக்தி மையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஈரானிய ஏவுகணைகள் தரைமட்டமாக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் மீதான போரில் இணையுங்கள் : சர்வதேசங்களுக்கு அழைப்பு விடுத்த நெதன்யாகு

Monday, March 23rd, 2026 at 8:20 (SLT)

ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான சக்திகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் சர்வதேச தலைவர்கள் கைகோர்க்க வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை

Monday, March 23rd, 2026 at 8:16 (SLT)

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்

Monday, March 23rd, 2026 at 8:13 (SLT)

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் உடல் நல்லடக்கம்

Monday, March 23rd, 2026 at 8:10 (SLT)

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் உடலானது நேற்றைய தினம் (22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மகள் மற்றும் மருமகனால் படுகொலை செய்யப்பட்டு, தனங்கிளப்பு பகுதியில் வீசப்பட்டிருந்தார். கொலையின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகியிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானியத் தூதர்களை வெளியேற்றும் சவுதி

Sunday, March 22nd, 2026 at 8:21 (SLT)

சவூதி அரேபியா ஈரானிய இராணுவத் தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்துள்ளது.ஈரானின் இராணுவத் தூதர் மற்றும் தூதரகத்தின் மேலும் நான்கு பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் அமெரிக்கா நடத்தும் வான்வழித் தாக்குதலுக்கு நிமிடத்திற்கு கோடி கணக்கில் செலவு

Sunday, March 22nd, 2026 at 8:07 (SLT)

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள், அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக செலவுமிக்க ராணுவ நடவடிக்கையாக மாறி வருகிறது. போர் தொடங்கிய முதல் ஆறு நாட்களிலேயே (மார்ச் 2026 முதல் வாரம்) சுமார் 11.3 பில்லியன் டாலர்களை (சுமார் 94,000 கோடி ரூபாய்) அமெரிக்கா செலவிட்டுள்ளதாக பெண்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போரின் ஆரம்ப கட்டச் செலவுகளை விட மிக அதிகமாகும். தற்போது போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், மொத்தச் செலவு 18 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>