குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : ஆனந்த விஜேபால

Wednesday, July 16th, 2025 at 10:19 (SLT)

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நிகழ்நிலை முறைமை : அமைச்சரவை ஒப்புதல்

Wednesday, July 16th, 2025 at 10:15 (SLT)

உலகளாவிய ரீதியில் உள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

Wednesday, July 16th, 2025 at 10:08 (SLT)

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சட்டத்தரணி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

Wednesday, July 16th, 2025 at 10:04 (SLT)

வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

Wednesday, July 16th, 2025 at 9:58 (SLT)

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

விமானத்தில் வந்த பார்சலிலிருந்து வீசிய நாற்றம்: அதிகாரிகள் கண்ட காட்சி

Wednesday, July 16th, 2025 at 9:56 (SLT)

வியட்நாமிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றிலிருந்து நாற்றம் வீசுவதைக் கவனித்த சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை பரிசோதித்துள்ளனர். அந்த பார்சலுக்குள் சுமார் 7 கிலோ அளவுக்கு சாக்லேட் வைக்கும் சிறிய சிறிய பிளாஸ்டிக் பெட்டிகள் 1,500 இருந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழில் வீடொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரம்

Tuesday, July 15th, 2025 at 10:24 (SLT)

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

Tuesday, July 15th, 2025 at 10:19 (SLT)

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த 10 வெளிநாட்டவர்கள் கைது

Tuesday, July 15th, 2025 at 10:08 (SLT)

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும் : டொனால்ட் டிரம்ப்

Tuesday, July 15th, 2025 at 10:04 (SLT)

உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்த போராட்டம்

Tuesday, July 15th, 2025 at 10:00 (SLT)

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சவுதி அரேபியாவுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இலங்கை

Tuesday, July 15th, 2025 at 9:57 (SLT)

சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் உள்ளிட்ட மூவர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

Monday, July 14th, 2025 at 10:49 (SLT)

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது

Monday, July 14th, 2025 at 10:46 (SLT)

முகத்துவாரம், இப்பாவத்த சந்தி பகுதியில் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ்.நெடுந்தீவில் கைதான 07 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

Monday, July 14th, 2025 at 10:23 (SLT)

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>