80 வயது மூதாட்டியின் மரண தண்டனை ரத்து

Saturday, July 19th, 2025 at 12:03 (SLT)

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) ரத்து செய்துள்ளது. 1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

பலத்த காற்றில் சிக்கி காணாமல் போன மீனவர்

Saturday, July 19th, 2025 at 12:00 (SLT)

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார். விபத்தில் சிக்கிய படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

Saturday, July 19th, 2025 at 11:47 (SLT)

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த 81 வயதான பௌத்த துறவி 

Friday, July 18th, 2025 at 10:53 (SLT)

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான பௌத்த துறவி கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிமல், வசந்தவை கைது செய்யுங்கள் ஜனாதிபதிக்கு சவால் : உதய கம்மன்பில

Friday, July 18th, 2025 at 10:49 (SLT)

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

ரயிலில் மோதி காட்டு யானை பலி

Friday, July 18th, 2025 at 10:44 (SLT)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

தேயிலைத் துறையின் வினைத்திறனை அதிகரிக்க புதிய திட்டம்

Friday, July 18th, 2025 at 10:38 (SLT)

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி, ரவி  உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது : அமைச்சர் பிமல் ரத்நாயக்க 

Friday, July 18th, 2025 at 9:17 (SLT)

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது. ஆனால் எமக்கு எந்த தனிப்பட்ட தேவையும் கிடையாது. எனவே நாம் விசாரணைகளுக்காக திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் : மூவர் பலி

Friday, July 18th, 2025 at 9:10 (SLT)

முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து : 50 பேர் பலி

Thursday, July 17th, 2025 at 12:12 (SLT)

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Thursday, July 17th, 2025 at 12:09 (SLT)

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

Thursday, July 17th, 2025 at 12:07 (SLT)

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.


மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : ஆறு பெண்கள் கைது

Thursday, July 17th, 2025 at 12:06 (SLT)

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் 25ஆம் திகதி ஆரம்பம்

Thursday, July 17th, 2025 at 12:03 (SLT)

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட சலுகை; காங்கேசன்துறை : நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் மகிழ்ச்சி அறிவிப்பு

Thursday, July 17th, 2025 at 12:01 (SLT)

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>