வவுனியாவில் பொதுமகன் உயிரிழந்ததால் பதற்றம்

Saturday, July 12th, 2025 at 9:57 (SLT)

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் விபத்தொன்றில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குறித்த பகுதியில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

Saturday, July 12th, 2025 at 9:54 (SLT)

அரசாங்கம், பாதீட்டில் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களுக்கான நிதியை முறையாகச் செலவிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

Friday, July 11th, 2025 at 9:57 (SLT)

கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

Friday, July 11th, 2025 at 9:51 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார். இது நாட்டின் ஏற்றுமதிகளின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நித்திரையில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு : பாணந்துறையில் சம்பவம்

Friday, July 11th, 2025 at 9:47 (SLT)

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இன்று வெள்ளிக்கிழமை (11) தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

Thursday, July 10th, 2025 at 10:29 (SLT)

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நிறுத்தியிருந்த உழவு இயந்திரத்தில் மோதி இளம் தந்தை பலி

Thursday, July 10th, 2025 at 10:27 (SLT)

மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், உழவு இயந்திரத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் திருகோணமலை, கோமரங்கடவல, புலிக்கண்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு 30% வரி விதிப்பு : டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Thursday, July 10th, 2025 at 10:22 (SLT)

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கந்தானை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

Wednesday, July 9th, 2025 at 10:10 (SLT)

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கந்தானை ரூபமுல்ல சந்தி மற்றும் கந்தானை நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

முடிந்தால் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் : அரசிடம் சவால் விடும் செல்வம் எம்பி

Wednesday, July 9th, 2025 at 10:06 (SLT)

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேசக்கூடாது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படைக்கு அனுமதி

Wednesday, July 9th, 2025 at 9:59 (SLT)

பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு, செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உளளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் செயற்பாடுகளால், சர்வதேச சமுத்திரவியல் அமைப்பு, குறித்த கடற் பிராந்தியங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களாக 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யூ.டி. நிஷாந்த ஜயவீர பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு

Wednesday, July 9th, 2025 at 9:52 (SLT)

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். கலாநிதி ஹர்சன சூரியபெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து வெற்றிடமான இடத்திற்கு யூ.டி. நிஷாந்த ஜயவீர நியமிக்கப்பட்டார்.


மின் வணிகம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Wednesday, July 9th, 2025 at 8:46 (SLT)

மின் வணிகத்தைச் சுற்றியுள்ள அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யவும், தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு திறமையான, நியாயமான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ட்ரம்புடன் கலந்துரையாடும் ஆசிய நாடுகள்

Wednesday, July 9th, 2025 at 8:43 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களை நடத்த, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Wednesday, July 9th, 2025 at 8:39 (SLT)

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி – அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>