யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளனர்

Saturday, June 28th, 2025 at 8:19 (SLT)

சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை 20 இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், அவை போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமிழ்த் தாய்மார்களா? என்பது குறித்து போரில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் கலந்து கொள்ளும் தீ மிதிப்பு உற்சவம்

Saturday, June 28th, 2025 at 8:13 (SLT)

இலங்கையில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்ளும் தீமிதிப்பு உற்சவத்திற்கு புகழ்பெற்ற கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில், பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (27) மாலை தீ மிதிப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

பிலிபைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Saturday, June 28th, 2025 at 8:10 (SLT)

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

மொட்டை அடித்த அர்ச்சுனா எம்.பி புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமுடி தானம்

Friday, June 27th, 2025 at 23:34 (SLT)

பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாளைய தினம் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் முகநூலில் கருத்தை பதிவிட்டுள்ளார்

அதாவது பிறந்தநாளை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறேன்.

மேலும் வாசிக்க >>>

கடத்தப்பட்ட NPP உறுப்பினர்கள் கடற்கரையில் மீட்பு

Friday, June 27th, 2025 at 23:29 (SLT)

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலி, உனவடுன கடற்கரை பகுதியில் வைத்து இன்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Friday, June 27th, 2025 at 19:51 (SLT)

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

Friday, June 27th, 2025 at 19:48 (SLT)

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள் சங்கானையில் போராட்டம்

Friday, June 27th, 2025 at 10:32 (SLT)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கொலைக் குற்றச்சாட்டுகள் : பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

Friday, June 27th, 2025 at 10:28 (SLT)

முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் விளக்கமறியலில்

Friday, June 27th, 2025 at 10:25 (SLT)

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஐந்து பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் வாசிக்க >>>

துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

Friday, June 27th, 2025 at 10:21 (SLT)

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Friday, June 27th, 2025 at 8:45 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

காருக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

Friday, June 27th, 2025 at 8:42 (SLT)

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்

Friday, June 27th, 2025 at 8:38 (SLT)

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, வியாழக்கிழமை (26) வெகு சிறப்பாக நடைபெற்றது.நாகபூசணி அம்மனுக்கு ஈழத்தில் காணப்படும் முக்கிய ஆலயம் இதுவாகும். வியாழக்கிழமை (26) அம்பாளின் கொடியேற்றம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் நாக பாம்பு ஆலயத்தின் முன்புறத்தே வந்து படமெடுத்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தது.

மேலும் வாசிக்க >>>

ரணில் ஒரு பேயன். அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு எத்தனை கோடி:இளங்குமரன்

Thursday, June 26th, 2025 at 23:41 (SLT)

ரணில் ஒரு பேயன். அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு எத்தனை கோடியென தெரியுமாவென பொதுவெளியில் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவை திட்டித்தீர்த்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.

மேலும் வாசிக்க >>>