செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது

Thursday, June 26th, 2025 at 23:36 (SLT)

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

Thursday, June 26th, 2025 at 23:31 (SLT)

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி

Thursday, June 26th, 2025 at 23:28 (SLT)

யாழ்ப்பாணம், அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று (26) மாலை 4:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அர்ச்சுனாவின் Mp பதவி தொடர்பில், இன்று நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்

Thursday, June 26th, 2025 at 23:25 (SLT)

யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது.

மேலும் வாசிக்க >>>

சியோனிச ஆட்சி இஸ்லாமிய குடியரசின் தாக்குதல்களால் நசுக்கப்பட்டு செயலிழந்துள்ளது : ஆயத்துல்லா அலி கொமய்னி

Thursday, June 26th, 2025 at 23:21 (SLT)

தனது தேசத்திற்கு இன்று (26) ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கொமய்னி ஆற்றிய உரையின் ஒரு பகுதி

மேலும் வாசிக்க >>>

40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை

Thursday, June 26th, 2025 at 18:37 (SLT)

உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா அரிசி கிடையாது என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடாக 40,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது. இதில் 5,000 மெட்ரிக் டொன் அரச நிறுவனங்கள் மூலமாகவும், ஏனைய அரிசியை தனியார் துறை மூலமாகவும் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

Thursday, June 26th, 2025 at 18:32 (SLT)

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுகிறார் அர்ச்சுனா

Thursday, June 26th, 2025 at 9:05 (SLT)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 26ஆம் திகதி(இன்றையதினம்) கூட விலக தயாராக இருப்பதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிம்மதியாக இருப்போம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள்

Thursday, June 26th, 2025 at 9:01 (SLT)

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

Thursday, June 26th, 2025 at 8:05 (SLT)

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

Thursday, June 26th, 2025 at 8:02 (SLT)

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது இதன்படி, இன்று முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு

Thursday, June 26th, 2025 at 7:57 (SLT)

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் சந்திரசேகரம் துரத்தியடிப்பு

Wednesday, June 25th, 2025 at 14:59 (SLT)

செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் .

மேலும் வாசிக்க >>>

பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன் : தேசபந்து தென்னக்கோன்

Wednesday, June 25th, 2025 at 14:56 (SLT)

“2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன்” என தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மொசாட் அமைப்பின் உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவருக்கு ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றம்

Wednesday, June 25th, 2025 at 14:48 (SLT)

இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவருக்கு ஈரான் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.ஈரானின் தஸ்னிம் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>