வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் : சுமந்திரன்

Tuesday, May 27th, 2025 at 7:47 (SLT)

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எதிர்கட்சி ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவோம் : முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

Tuesday, May 27th, 2025 at 7:42 (SLT)

கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். எதிர்வரும் 2ஆம் திகதி அதனை கண்டுகொள்ளலாமென ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Monday, May 26th, 2025 at 8:08 (SLT)

புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மறைந்த நடிகை மாலினியின் இறுதிக் கிரியை இன்று

Monday, May 26th, 2025 at 8:04 (SLT)

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) இடம்பெறவுள்ளது. அதன்படி, இறுதிக் கிரியை அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் திடீரென உயிரிழந்த இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை

Monday, May 26th, 2025 at 8:00 (SLT)

25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை

Monday, May 26th, 2025 at 7:12 (SLT)

அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை பலி : கிளிநொச்சி சம்பவம்

Sunday, May 25th, 2025 at 20:07 (SLT)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மீனவ சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sunday, May 25th, 2025 at 20:04 (SLT)

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

துசித ஹல்லோலுவ மீதான துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர்கள் மூவர் கைது

Sunday, May 25th, 2025 at 20:01 (SLT)

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட மூவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

Sunday, May 25th, 2025 at 7:26 (SLT)

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று நீர் விநியோகத் தடை

Sunday, May 25th, 2025 at 6:09 (SLT)

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை 08 மணி முதல் மாலை 08 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

3,147 தாதியர்கள் இன்று சேவையில் இணைக்கப்பட்டனர்

Saturday, May 24th, 2025 at 20:16 (SLT)

3,147 தாதியர்கள் அரச சேவையில் இன்று(24) இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

Saturday, May 24th, 2025 at 20:02 (SLT)

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

Saturday, May 24th, 2025 at 19:59 (SLT)

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

வொஷிங்டன் செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

Saturday, May 24th, 2025 at 19:56 (SLT)

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வொஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும்.

மேலும் வாசிக்க >>>