கொழும்பில் தாழிறங்கிய வீதி சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு

Thursday, August 21st, 2025 at 10:30 (SLT)

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்

Thursday, August 21st, 2025 at 10:28 (SLT)

மனித நேயம், நகைச்சுவை, கருணையால் உலக மக்களை கவர்ந்த“Caught in Providence” நிகழ்ச்சியின் பிரபல நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோ தனது 88 வயதில் காலமானாார்.

மேலும் வாசிக்க >>>

அதிக விலைக்கு விற்பனை துறைமுக நகரத்தில் அமைந்துள்ள கடைக்கு பெருந்தொகை அபராதம்

Thursday, August 21st, 2025 at 10:25 (SLT)

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள ஒரு தனியார் விற்பனை நிறுவனம் அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

Thursday, August 21st, 2025 at 10:21 (SLT)

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு சென்று வெளிவந்த பெண் ஒருவர் சினிமா பாணியில் ஆட்டோவில் கடத்தல்

Thursday, August 21st, 2025 at 7:46 (SLT)

மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

கராச்சியும் வெள்ளத்தில் மூழ்கியது 10 பேர் பலி

Thursday, August 21st, 2025 at 7:41 (SLT)

பாகிஸ்தானின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கராச்சி, இந்த நாட்களில் நாட்டைத் தாக்கும் பலத்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Thursday, August 21st, 2025 at 7:36 (SLT)

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இதனை அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரியவந்துள்ள மேலும் பல தகவல்கள் : அமைச்சர் நளிந்த தகவல்

Wednesday, August 20th, 2025 at 12:14 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல்

Wednesday, August 20th, 2025 at 12:09 (SLT)

தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு

Wednesday, August 20th, 2025 at 12:06 (SLT)

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மிகபழமையான தேவாலயத்தை இடம் மாற்ற முயற்சிக்கும் சுவீடன்

Wednesday, August 20th, 2025 at 7:28 (SLT)

சுவீடனின் கிருனா (Kiruna) நகரில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயால் அழைக்கப்பட்டுள்ளார்

Wednesday, August 20th, 2025 at 7:24 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

மேலும் வாசிக்க >>>

யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

Wednesday, August 20th, 2025 at 7:21 (SLT)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தபால் வேலைநிறுத்தத்தால் 15 இலட்சம் கடிதங்கள் முடக்கம்

Tuesday, August 19th, 2025 at 12:26 (SLT)

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணி ஆகியவை தொடங்கியுள்ள தொடர் வேலைநிறுத்தத்தால், மத்திய தபால் பரிவர்த்தனை மையம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 15 இலட்சம் கடிதங்கள் தேக்கமடைந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் கடமை : முனீர் முளப்பர்

Tuesday, August 19th, 2025 at 12:23 (SLT)

தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொறுத்தமில்லை என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>