சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

Tuesday, August 19th, 2025 at 12:21 (SLT)

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

Tuesday, August 19th, 2025 at 12:17 (SLT)

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் முதல் 10 நாடுகளில் இலங்கை

Tuesday, August 19th, 2025 at 10:50 (SLT)

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை அடங்குவதாக இந்திய அரசாங்கத்தால் பகிரப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பணம் அச்சிடுவது குறித்து அரசாங்கத்திடம் இருந்து வந்த அறிவிப்பு

Tuesday, August 19th, 2025 at 10:46 (SLT)

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க ஜனாதிபதி உடனான சந்திப்பு வெற்றி : உக்ரைன் ஜனாதிபதி

Tuesday, August 19th, 2025 at 10:42 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார்.

மேலும் வாசிக்க >>>

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு

Tuesday, August 19th, 2025 at 10:37 (SLT)

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு : செல்வம் அடைக்கலநாதன்

Monday, August 18th, 2025 at 12:50 (SLT)

இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மிஹிந்தலை தேரர் CID யில் ஆஜர்

Monday, August 18th, 2025 at 12:46 (SLT)

மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Monday, August 18th, 2025 at 12:40 (SLT)

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கொட்டும் டொலர்கள்

Monday, August 18th, 2025 at 12:33 (SLT)

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கும் ஐரோப்பிய ‘ஸ்மார்ட்விங்ஸ்’ விமானம்

Monday, August 18th, 2025 at 12:30 (SLT)

ஐரோப்பிய ஓய்வு நேர விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், டிசம்பர் மாதம் முதல் போலந்தின் வார்சாவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக கொழும்புக்கு வாராந்திர விமானங்களை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, மஸ்கட்-கொழும்பு-மஸ்கட் பிரிவில் பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனம் அனுமதிக்கப்படும். இந்த சேவை போயிங் 737 MAX விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்

Monday, August 18th, 2025 at 12:26 (SLT)

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 29 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

Sunday, August 17th, 2025 at 11:33 (SLT)

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க >>>

நல்லூரில் வாள்வெட்டு தாக்குதல் : ஐவர் கைது

Sunday, August 17th, 2025 at 11:30 (SLT)

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் இன்றிரவு பொதுமகன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழுவினால் குறித்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தோனேசியாவில் நிலஅதிர்வு

Sunday, August 17th, 2025 at 11:28 (SLT)

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.