ட்ரம்ப் தேர்தல் முறையை கேள்விக்குள்ளாக்குவது ஆபத்தானது :ஒபாமா

obamaஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் , அதிபர் தேர்தல் அமைப்பு மோசடியானது என்று கூறியிருப்பதை ” ஆபத்தான, மற்றும் ஜனநாயகத்தை அரித்தெடுக்கக்கூடிய’ கருத்துக்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ,வர்ணித்திருக்கிறார்.தேர்தலின் நியாயபூர்வத்தன்மையைப் பற்றி, மோசடி நடந்ததற்கான ஒரு துளிகூட ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் விதைக்கிறார் என்று பராக் ஒபாமா குற்றம் சாட்டினார்.

ஹிலரியுடன் புதனன்று நடந்த இறுதித் தொலைக்காட்சி விவாதத்தின்போது, தேர்தலில் தான் தோற்றால், தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான ஒரு முடிவை தான் ஏற்றுக்கொள்வேன் என்றும், ஆனால் கேள்விக்குரிய முடிவு என்று தான் கருதும் ஒரு முடிவு வந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும், பிறகு ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

இதனிடையே, ட்ரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்ற் பத்தாவதாக ஒரு பெண் குற்றஞ்சாட்டிய நிலையில், தங்கள் வேட்பாளருக்கெதிராக ஹிலரி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட வகையில், அவதூறு பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறார் என்று ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியது.

கரேனா வர்ஜினியா என்ற அந்தப் பெண், 1998ல் நடந்த ஒரு டென்னிஸ் போட்டி ஒன்றில், தனது மார்பகத்தை ட்ரம்ப் தடவினார் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply