செம்மணியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

June 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனக் கோரி, வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் யாழ்ப்பாணம், செம்மணியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயார்

June 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்

June 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மேயர் தெரிவில் நிலைமையைக் கட்டுப்படுத்த அழைக்கப்பட்ட பொலிஸார்

June 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று (20) உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. காலி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா? என்பதை முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 பேரும், பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 17 பேரும் வாக்களித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

June 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை

June 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் ஆய்வக பரிசோதனையில் தெரியவந்த தகவல்

June 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்றீரியாக்கள் மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (19) நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

June 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் : அமைச்சர் இராமலிங்கம்

June 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

June 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 ஒக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர ஏனைய நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

53 நாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து உள்ளிட்ட கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் : நீதி அமைச்சர்

June 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இச்சட்டத்தில் 53 நாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம்

June 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

June 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு தேசிய மக்கள் சக்தியும் ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை

June 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதியிடப்பட்டுள்ளது

June 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button