பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதியிடப்பட்டுள்ளது
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தின் எஸ். துரை ராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கோரினார்.
அதன்படி, வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பிரதிவாதி தரப்பினருக்கு இரண்டு வார கால அவகாசம் அளித்த நீதியரசர்கள் அமர்வு, அந்த திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறும் மனுதாரர் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply