தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு தேசிய மக்கள் சக்தியும் ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
தேசிய மக்கள் அரசாங்கம் கூட்டணியற்ற அரசாங்கமாகத் தான் உள்ளது. இலங்கைத தொழிலாளர் காங்கிரஸ் என்பது கூட்டணி அல்ல. நுவரெலியாவில் யாருமே சபை அமைக்க முடியாது ஒரு மும்முனைப் போட்டியாக உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி சபையைத் தனியாக அமைக்க வேண்டும். இரண்டு கட்சிகளுடன் சேர்ந்து தான் பயணிக்க முடியும்.
இந்த சூழ்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனைத்து சபைகளிலும் அதிகமான பெரும்பான்மையுடன் இருப்பதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடனும் எஸ்.ஜே.பி அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தோம்.அதனையடுத்து கொட்டக்கலை சபைில் ஆட்சி செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளது.
ஆகையால் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் அனைத்து சபைகளிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும். இது கட்சிகளின் கூட்டணி அல்ல. சபைகளை நடத்தும் வழிமுறைகளாகும். எங்களுடைய பெரும்பான்மையை மதித்து ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். அதேபோன்று அவர்களுடைய பெரும்பான்மைக்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு உங்கள் ஆதரவு இனி கிடைக்குமா, இது பாராளுமன்றமோ மாகாணசபைகளோ அல்ல. தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து சுயேட்சையாக போட்டியிட்டோம்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அதேபோன்று நாம் இணைந்து போட்டியிடுவோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்த நிலை இல்லாததால் இருக்கின்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும். இது ஒன்றும் புதிதல்ல. இது தான் நடைமுறை. மக்கள் யாருக்கு அதிகமாக வாக்களிக்கின்றனேரோ அதன் அடிப்படையில் தான் ஆட்சி அமைக்க முடியும் – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply