160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மானிப்பாய், சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (20) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply