ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் நன்கு குழப்படைந்துள்ளனர் : பிரதமர்

April 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

April 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது

April 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

April 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது : பிரதமர்

April 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

April 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலம் காலமாய் பகைமையாய் இருந்த இருள்; அவநம்பிக்கையை மட்டுமே தந்த இருள்; அடிமைத்தனத்தையும் சாபத்தையும் தந்த இருள்; சாவு பாவம் தந்த இருள்; கிறிஸ்துவின் உயிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டு- இன்று புனித இரவு தந்து, சாவின் மாந்தர் எம்மை உயிர்ப்பின் சாட்சிகளாய் மாற்றி வாழச் சொல்கிறது ஆண்டவரின் உயிர்ப்பின் ஞாயிறு.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுர தேர்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்படுகின்றார் : ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும். இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார். ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக் கண்டறிவதற்காக அணிதிரளுவோம் : சஜித் பிரேமதாச

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும் இவர்களுக்குரிய நீதியை வழங்க விரும்பவில்லை என்பது இன்றும் தெளிவான உண்மையாகும். எனவே வீண் பேச்சுக்களை தவிர்த்து நீதியை நிலைநாட்ட உண்மையைக் கண்டறிய அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் : நாமல் ராஜபக்ஷ

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்களை கைது செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்துள்ளதாக அரசாங்கத்தினர் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். தேர்தல் மேடைகளில் ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானின் சாரதி கைது

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை நேற்று (18) காலையில் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றார் : வி.எஸ்.சிவகரன்

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

April 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பெப்ரல் அமைப்பு

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் : யாழில் ஜனாதிபதி

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்

April 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button