சட்டசபையில் ‘தொங்குநிலை’ தவெகவிற்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனி பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர். 2016ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர். ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் ‘தொங்குநிலை’ உருவாகியுள்ளது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்கிற வகையில், தவெக’வுக்கு தனிப்பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியல் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக்கூடாது என்பதே கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜ கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். அதிமுக தலைமையிலான பாஜ அணியின் இந்த வீழ்ச்சி, எமது முயற்சியால் விளைந்தததேயாகும். இத்தேர்தலில் இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெகவை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜ, அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜ எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply