இங்கிலாந்தில் ரூ.951 கோடி பரிசுக்கான குளோபல் பள்ளிகள் விருது பட்டியலில் இடம் பிடித்த 2 இந்திய பள்ளிகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த வார்கி அறக்கட்டளை 2026 குளோபல் பள்ளிகள் பரிசு என்ற விருதுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறும் பள்ளிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.951கோடி)பரிசுத்தொகையாக வழங்கப்படும். எதிர்காலத்திற்கான கல்வியைப் புதுமையான முறையில் மறுவடிவமைக்கும் உலகின் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் அழுத்தமான செயல் விளைவை ஏற்படுத்தும் பள்ளிகள் 10 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கவுரவிக்கப்படுகிறது.
இந்த பரிசுத்தொகைக்காக113 நாடுகளில் இருந்து சுமார் 3000 பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்டன. இவற்றில் இருந்து இறுதிப்பட்டியலுக்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதிப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. டெல்லியில் உள்ள கதா லேப் பள்ளி கலை மற்றும் கலாச்சாரப் பிரிவிலும், டெல்லி பப்ளிக் பள்ளி பெங்களூர் நார்த், கல்விப்பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் வார்கி அறக்கட்டளை நிறுவனர் சன்னி வார்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply