ஈரானில் வணிக வளாகத்தில் தீ 8 பேர் பலி, 36 பேர் காயம்

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டிஷே நகரில் அர்கவான் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது. பல அடுக்குமாடிகளை கொண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. வளாகத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி அலறிஅடித்து வெளியே ஓடினார்கள். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply