பாகிஸ்தானின் வெப்ப அலைக்கு 10 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பஅலை அதிகமாக உள்ளது. இந்த வெப்ப அலையானது காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தெற்காசியா முழுவதும் அதிகரித்து வரும் அதிதீவிர வெப்ப நிலைகளின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும். இந்நிலையில் கராச்சியில் நேற்று முன்தினம் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்,நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டன.

வெப்பதாக்கத்தின் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நேற்று முன்தினம் கராச்சியில் 44 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டுக்கு பின் பதிவான அதிகபட்ச வெப்பமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply