இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு

December 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதிகரித்து வரும் பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வீதி விபத்துகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இடியுடன் மழை பெய்யக் கூடிய சாத்தியம் : காலநிலை தொடர்பான அறிவிப்பு

December 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: 7 இந்தியர்கள் காயம்

December 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் 7 இந்தியர்கள் காயமடைந்தனர். அவர்களில் மூவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருக்கிறது. இந்த சம்பவத்தை இந்திய வெளியுறவுத் துறை (MEA) கடுமையாக கண்டித்துள்ளது.இந்த கொடூரமான தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிரிந்திவெல பகுதியில் நபரொருவர் கொலை

December 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிரிந்திவெல – வல்கம்முல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (21) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்திருந்த காணியில் இருந்த காவலாளி ஒருவரே இக்கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட  ஐவர் கைது

December 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது மாவை சேனாதிராஜா குறித்து சுமந்திரன் கருத்து

December 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் எந்தப் பயனுமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை

December 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அட்டனில் பஸ் விபத்து : மூவர் பலி

December 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அட்டனில் பஸ் விபத்து – மூவர் பலி – 40 பேர் காயம் – சிலர் கவலைக்கிடம்அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாகாண சபைத் தேர்தல் முறைமை சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு : தேர்தல்கள் ஆணைக்குழு

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கரையொதுங்கிய படகில் வந்த மியன்மார் அகதிகளில் 12 பேருக்கு தடுப்பு காவல், மிகுதியானவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு வெள்ளிக்கிழமை (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் : சவுதிமருத்துவர்

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் காரை செலுத்திய சவுதி வைத்தியர் : இருவர் உயிரிழப்பு, 60 பேர் காயம்

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியின் மக்டிபேர்க்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஒருவர் பலி, 5 பேர் காயம்

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவித்தல்

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக தவறிழைக்கவில்லை : வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

December 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அச்சம்பளம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் சம்பள நிர்ணய விதிகளுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனடிப்படையில் நோக்குகையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஹிமாலி அருணதிலகவினால் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button