டிரம்புக்கு மருத்துவ பரிசோதனை

அமெரிக்காவில் மிக அதிக வயதில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புக்கு 79 வயதாகிறது. இந்த நிலையில் வரும் 26ம் தேதி வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் டிரம்புக்கு மருத்துவ பரிசோதனைகள் நடக்கிறது. அப்போது பல் மருத்துவரையும் அவர் சந்திக்க உள்ளார். இது வருடாந்திர உடல் பரிசோதனை என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பிறகு மருத்துவ நிபுணர்களை நான்காவது முறையாக சந்திக்க உள்ளார். வயது ரீதியான உடல்நலம் மற்றும் உடற்தகுதிப் பிரச்னைகளுக்காக முன்னாள் அதிபர் ஜோ பைடனை அடிக்கடி விமர்சித்து வரும் டிரம்ப், தனக்கு வயது முதிர்வு ஏற்பட்ட போதிலும் நன்றாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் தனது உடற்பயிற்சி குறித்து பேசுகையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் ஒரு நிமிடம் உடற்பயிற்சி செய்வதாக நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply