அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை சீன பயணம்

சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பின்பேரில் அதிபர் டொனல்ட் டிரம்ப் நாளை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்த போர், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் தைவான் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவற்றுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கின்றார். நாளை அதிபர் டிரம்ப் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக புறப்பட்டுச்செல்கிறார்.

அமெரிக்காவின் முதன்மை துணைப் பத்திரிக்கை செயலாளர் அன்னா கெல்லி கூறுகையில்,‘‘அதிபர் டிரம்ப் புதன் கிழமை மாலை பெய்ஜீங் வருவார். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும்” என்றார்.

அதிபர் டிரம்ப் வியாழன்று சீன அதிபர் ஷீ ஜின்பிங்குடான சந்திப்பில் கலந்து கொள்வார், அதனை தொடர்ந்து ஹெவன் கோயிலுக்கு சென்று , அரச விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் வெள்ளியன்று இரு நாட்டு தலைவர்களும், தேநீர் விருந்து மற்றும் மதிய உணவிற்காக சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனத் தலைவரை ஒரு பரஸ்பர பயணத்திற்காக அமெரிக்கா வரவேற்பதற்கு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply